பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இராமனது சரம் தவறாது. இராமனை மறந்தவர் எவரும் இலச். ஆதலின், உன் உயிரையும் செல்வத்தையும் சுற்றத்தார் களையும் அழியாமல் நிலையாய்ப்பெற்றிருக்க, நீ சீதையைச் சிறை விட்டு அனுப்பி விடு என்று சொல்லச் சொல்லி என் தலைவர் என்னை அனுப்பினார்: 'ஆதலால் தன் அரும்பெறல் செல்வமும் ஒதுபல் கிளையும் உயிரும் பெறச் சீதையைத் தருக என்றெனச் செப்பினான் சோதியான் மகன் நிற்கெனச் சொல்லினான்’ (101) என்று அனுமன் இராவணனுக்கு நயமான முறையில் அறிவுரை வழங்கிப் பார்த்தான். 3. இந்திரசித்தின் அறிவுரை இராவணனின் இளையமகன் அக்ககுமாரன் இறந்ததும் பெரியமகன் இந்திரசித்து இராவணனை அடைய இருவரும் அழுது கலங்கினர். பின்னர் இந்திரசித்து தந்தை இராவண னுக்குச் சிறிது அறிவுரை பகரலானான். தந்தையே! நீ சிறிதும் உறுதி எதுவென ஆராயவில்லை. இப்போது வருந்துகிறாய். குரங்கின் ஆற்றலை அறிந்தும், நம்மவர் குழுவைப் போருக்கு அனுப்பினாய். அவர்கள் இறந்து பட்டனர். அவர்களைக் கொன்றது குரங்கு அன்று நீதான் கொன்றாய் என்றே கூறவேண்டும். பாசப் படலம்: 'ஒன்று நீ உறுதி ஓராய், உற்றிருந்து உளைய கிற்றி வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ சென்று நீர் பொருதிர் என்று திறத்திறம் செலுத்தித் தேயக் கொன்றனை நீயே யன்றோ? அரக்கர்தம் குழுவை எல்லாம்' (9)