பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இராவணனுக்குப் பைய அறிவுரை பகரலானான். பிணி வீட்டுப் படலம்: நீதியை உடைய அண்ணா! இவ்வாறு சினத்தல் முறை அன்று. தக்கோய்! இறைவன் தந்த வரத்தைப் பெற்ற 虚 அறநெறிப்படி ஆண்டு வருகிறாய், நீ மறைகளில் வல்லவன்: எனவே, தூது வந்தவனைக் கொல்லுதல் முறையோ? இம் மண்ணுலகத்திலும் சரி-வேறு அண்டங்களிலும் மன்னர்கள் மாதரைக் கொன்றிருப்பினும், தூதரைக் கொன்றவர் எவரும் இலர். 'பூதலப் பரப்பின் அண்டப் பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர் வேதம் உற்று இயங்குவைப்பின் வேறு இடத்து வேந்தர் மாதரைக் கொலை செய்தார்கள் உளரென வரினும் - வந்த தூதரைக் கொன்றுளார்கள் யாவரே தொல்லை . நல்லோர்?" தூதர்கள், பகைவர் நாடு அடைந்து, தம் தலைவர் சொல்லச் சொன்ன செய்தியை அடக்கத்துடன் கூறும் மெய் விரதம் பூண்டவர்கள். இத்தகைய தூதரைக் கொல்வ தினினும், நல்லவரின் வேறு செயல் உண்டோ? நமது குலம் குற்றத்திற்கு உரியதாகுமே. "பகைப்புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது , - பகர்ந்து, பற்றார் மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட தகைப்புலக் கருமத் தோரைக் கோறலின்

  • தக்கார் யார்க்கும் நகைப்புலன் பிறிதொன் றுண்டோ? நம்குலம்

நவை இன்றாமோ? (109).