பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 "இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ! மறந்தவர் அறிந்துணர்வு வந்தனர் கொல் என் கோ! துறந்துயிர் வந்திடை தொடர்ந்தது கொல் என் கோ! திறந்தெரிவ தென்னை கொல்! இந் நன்னுதலி செய்கை (64), 'இழந்த மணி புற்றரவு எதிர்த்த தெனல் ஆனாள்; பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்: குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழந்து விழிபெற்றதோர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்” (65), சீதை கணையாழியைத் தலையிலும் முலையிலும் கண்ணிலும் வைத்து ஒத்திக் கொண்டாள். அளவற்ற மகிழ்ச்சியால் மோந்தும் உயிர்த்தும் பேசமுடியாதவளா னாள். பின்னர் ஒருவாறு தன்னிலையடைந்து பேசலா னாள். இந்த மோதிரம் தன்னை அடுத்த பொருள்களையெல் லாம் தன்னிறம் ஆக்கி விட்டதே. தான் தொட்ட பொருள் களையெல்லாம் பொன் னாக மாற்றும் தெய்வ வேதிகைக் (இரசக்) குளிகையோ இவ்வாழி? 'ஆண்தகை தன்மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் தீண்டளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ" - (68) பசித்தவர்க்கு அமுதமாகவும், அறவோர்க்கு நல்விருந் தாகவும், இறந்த உயிரை மீட்கும் மருந்தாகவும் இம் மணி யாழி உள்ளதே! இது வாழ்க! 'இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது; அறத்த ரை அண்மும் விருந்தெனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது; வாழி மணி ஆழி' (69),