பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சீதையின் வினா இவ்வளவு சிறிய உருவுடன் எவ்வாறு கடந்தாய்? ஏதேனும் செய்த தவத்தால் இயன்றதோ? அல்லது சித்தி விளையாட்டோ? என்று வினவினாள். பின்னர், அனுமன், வானளாவப் பேருருவம் (விசுவ: ரூபம்) எடுத்துக் காட்டினான். சீதை அஞ்சி, முன்போலவே சிற்றுரு கொள்க எனச் சிற்றுருக் கொண்டான். சீதையின் பாராட்டு: - அனுமனின் ஆற்றல் அறிந்த சீதை அவனைப் பாராட்டலானாள்: அனும! நீ உலகை மலையோடும் பெயர்ப்பினும், வான த்தையே எடுப்பினும், ஆதிசேடனை ஒரு கையால் பற்றினும், அச்செயல்கள் உன் பெருமைக்கும் ஆற்றலுக்கும் போதமாட்டா. எனவே, நீ இந்தக் கடலைக் கடந்ததில் வியப்பு இல்லை. (109). இராமன் பெருமை நிலைக்க நீ ஒருவன் போதும். உன் ஆற்றலை நோக்க, இலங்கை ஏழு கடலுக்கும் அப்பால் இல்லாதது உனக்குக் குறைவே. ஏழு கடலையும் தாண்டுவாய் நீ. 'ஆழி நெடுங்கை ஆண்டகைதன் அருளும் புகழும் - அழிவு இன்றி ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உனை ஆனாய் பாழி நெடுந்தோள் வீரா நின் பெருமைக் கேற்பப் பகை இலங்கை ஏழு கடற்கும் அப்புறத் தாகா திருந்தது இழிவு அன்றே?’ (110). உனது ஆற்றல் இத்தகைய தென்றால், உன்னை நோக்க நான்முகன் முதலியோர் மிக எளியர்-வெற்றர் (111);