பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 இராமனுக்கு இலக்குமணன் ஒருவனே துணை என மயங்கினேன். இப்போது நீ இருப்பதால் போதும்; இணிக கவலையில்லை. (112) இனி யான் மாண்டாலும் சரியே! சிறை மீண்டேன் பகைவரை வேர் அறுத்தேன்; இராமன் திருவடியடைந் தேன்; புகழ் அன்றிப் பழி தீண்டேன். (113) என்றெல்லாம் சீதை பாராட்டினாள். அனுமன் மொழி: அன்னையே நீ அஞ்ச வேண்டா. வாணர மறவர்கள் கடல் மணல்போல் பலராவர். இராமன் அடியவர் பலர் அவர்தம் பண்ணையில் யானும் ஒருவன்; ஏவல்-கூவல் பணி செய்வேன். (114) எழுபது வெள்ளம் சேனை உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு கை அள்ளிக் குடிக்கவும் இந்தக் கடல் போதாது. இராமருக்கு இலங்கை இருக்கு மிடம் தெரியாமையால் இலங்கை இன்னும் உள்ளது. தெரிந்தால் உடனே அழியும் . 'வெள்ளம் எழுபது உளதன்றோ வீரன் சேனை இவ்வேலைப் பள்ளம் ஒருகை நீர் அள்ளிக் குடிக்கச்சாலும் பான்மையதோ? கள்ள அரக்கர் கடியிலங்கை காணாது ஒழிந்ததால் அன்றோ உள்ளதுணையும் உளதாவது? அறிந்த பின்னும் உளதாமோ? 'ais, வானரப் படைத்தலைவர்கள் எண்ணற்றவர்கள்; அவர் களை நோக்க இந்த அரக்கர்கள் உறையிடவும் போதார் அவர்தம் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. (117) A யான் சென்று அறிவித்ததும், வானரர் வருவர்; அன்றே இலங்கை அழியும். குரங்கு கை மாலை போல சு-12