பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 "ஆய துண்மையின், நானும், அது இன்றெனின் மாய் வென் மன்ற, அறம் வழுவாதென்றும் ; நாய கன்வலி எண்ணியும் நானுடைத் தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்' (23) (நானுடை' என்னும் கம்பர் ஆட்சி கவனிக்கத்தக்கது.) இலக்குமணன் கட்டியதும் இராவணன் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்ததுமாகிய குடில் இதோ அப்படியே உள்ளதை உன் கண்களால் காண்க. (24) இந்தக் குடிலை விட்டு ஒரு போதும் நீங்கமாட்டேன். உயிர் இருப்பதற்காக நீர் உண்ணவேண்டும் அல்லவா? அதற்காக, இராமரின் நிறம் போன்ற இந்தப் பொய்கைக்கு மட்டும் போய் வருவேன். (25) ஆதலால் உன்னுடன் வருதல் முறையன்று. நீ இராமரிடம் மீண்டும் சென்று நிலைமையைக் கூறுவாயாக! என்று சீதை உடன்வர மறுத்துக் கூறிவிட்டாள். (26) அனுமனுக்கும் சீதைக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் இவையாகும். 3. இராவணன்-அனுமன் உரையாடல் இந்திரசித்து அனுமனைக் கட்டி இழுத்துச் சென்று இராவணன் முன் விட்டதும், இராவணன் அனுமனை வினவுகிறான்: (பிணி வீட்டுப் படலம்) இராவணன் வினா: நீ யார்? ஏன் வந்தாய்? நீ திருமாலா- இந்திரனாசிவனா- ஆதிசேடனா? பெயரையும் உருவத்தையும் மறைத்து வந்திருக்கும் நீ யார்? காலனா- முருகனா- தென் திசைக் கிழவனாட எண் திக்கு ஆட்சியாளருள் நீயார்?