பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நிமித்தம்-கனா மக்களிடையே நிமித்தம் (சகுனம்) பார்க்கும் பழக்கம் உண்டு. காணும் நிமித்தத்தைக் கொண்டு பின்னால் இன்னது நிகழக்கூடும் என்று மக்கள் உய்த்துணர்வர். நிமித்தத்தின்படி நடந்தாலும் நடக்கலாம்-நடக்கா விடினும் விடலாம். நிமித்த நூல் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. கண்ட நிமித்தம் நல்ல தாயின், மக்கள் செயலைத் தொடங்கித் தொடர்ந்து செய்தலும், தீயதாயின் செயல் தொடங்காமல்-செய்யாமல் விடுதலும் உண்டு. நிமித்தம் போலவே, உறக்கத்தில் காணும் கனவுகட்கும். என்னென்னவோ பொருள் கொண்டு மக்கள் துன்புணர்வு கொள்வதோ-இன் புணர்வு கொள்வதோ உண்டு கனா நூல் என்னும் நூலும் உண்டு. கண்ட கனாக்களின் அடிப் படையில் வீணான எண்ணங்களைக் கொள்பவர் பலர். நாடகங்களிலும் காப்பிய நூல்களிலும் சுவைக்காக நிமித்தமும் கனாவும் இடம் பெறச் செய்வதுண்டு. இலக்கிய ஒப்பு நோக்கு என்னும் பொருளில், கோவலன்கண்ணகி வரலாற்றைக் காண்பாம். கோவலன் நாடகங் களில், கோவலன் சிலம்பு விற்கச் சென்ற பிறகு, 'தேங்காய் உடைந்துவிடும் திருவிளக்கு நின்றுவிடும் மாங்காய் அழுகி விடும்...... * > என்பது போன்ற பாடல்கள் பாடப்படும். சிலப்பதிகாரத். தில் கூறப்பட்டுள்ள நிமித் தத்தைக் காண்பாம் : கோவலன்