பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இனி, இச்செய்திகள் அடங்கிய பாடல் பகுதிகள்சுந்தர காண்டம்- கடல் தாவு படலத்தில் உள்ளவை. முறையே வருமாறு: 1. “வன்தந்த வரிகொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய பொன்தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு போவ நின்றந்தம் இல்லான் ஊன்ற நெரிந்துகீழ் அழுந்தும் நீலக் குன்றம்தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.' (3) 2. "புகலரும் முழையுள் துஞ்சும் பொங்குளைச் சீயம் பொங்கி உகலரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த'- (4) 3. "அகலிரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகி பகலொளி கரப்ப வானை . மறைத்தன பறவை எல்லாம்'ட (4) 4. "மெய்யுறத் தழி இய மெல்லென் பிடியொடும் வெருவ லோடும் கையுற மரங்கள் பற்றிப் பிளிறின களி நல் யானை'- (5), .ே "புன்புற மயிரும் பூவா கண்புலம் புறத்து நாறா, வன்பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ'- (6),