பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் பெயரில் சிலப்பதிகாரப் பகுதி ஈண்டு தரப்பட்டது. இனி இதிலிருந்து கம்பராமாயணத்திற்கு வருவோம் : கம்பர் தம் இராமாயண நூலில், பல இடங்களில், வலப்பக்க உறுப்புகள் துடித்ததாகவும் கூறியுள்ளார். ஆண் களுக்கு வலப்பக்கம் துடிப்பது நல்ல சகுனமாம்-இடப் பக்கம் துடிப்பது தீய சகுனமாம். பெண்கட்கு இடப்பக்கம் துடிப்பது நல்ல நிமித்தமாம்-வலப்பக்கம் துடிப்பது தீய நிமித்தமாம். - அனுமன் இராவணன் மனையில் புகுந்தபோது சில தீய நிமித்தங்கள் தோன்றினவாம்: நிலமும் நெடுமலையும் துடித்தன. பெண்கட்குக் கண் களும் புருவங்களும் தோள்களும் வலப்பக்கம் துடித்தன. திசைகள் துடித்தன. வானம் மின்னல் இன்றியே இடி இடித்தது. மங்கல முழுக் குடங்கள் (நிறை கும்பங்கள்) வெடித்தன. நிலைமையை உற்று நோக்கிய அனுமன், இந்த நகர்க் குத் திருகெட்டுத் தீமை நிகழப்போகிறது என்று இரங்கி னான். யாராயிருப்பினும் ஊழின் வலிமைக்கு ஆட்பட்டே யாகவேண்டும் என்று உணர்ந்தான்; ஊர்தேடு படலம்: 'நிலம் துடித்தன; நெடுவரை துடித்தன; நிருதம் குலமாதர் பொலந் துடிக்கு அமை மருங்குபோல் கண்களும் புருவமும் பொன் தோளும் வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி நெடுவானம் கலந்து இடித்தன; வெடித்தன பூரண மங்கல கலசங்கள்' (202):