பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 'புக்குநின்று தன் புலன்கொள நோக்கினன்; பொருவரு அருந்திரு உள்ளம் நெக்கு நின்றனன்; நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த் திரு என்னா, எக்குலங்களின் யாவரே யாயினும் இருவினை எல்லோர்க்கும் ஒக்கும்; ஊழ்முறையல்லது வலியதொன்று இல்லென உணர்வுற்றான்' (203) காப்பியச் சுவைகளுள் இந்த மாதிரியான செய்திகள் அமைப்பது சிறந்த ஒன்றாகும். இராமன் வந்து தன்னைக் காணுதற்கு முன்பு, சீதை தன் உற்ற தோழியாக உள்ள திரிசடையிடம் தனக்கு உற்ற நிமித்தங்களைத் தெரிவிக்கின்றாள். தூய திரிசடையே ஒன்று கேள்! எனக்கு ஏதேனும் இப் போது நன்மை வருமோ? என் புருவம், கண், தோள் முதலியன வலம் துடிக்காமல் இடப் பக்கம் துடிக்கின்றன. வரக்கூடிய நன்மை என்னவோ! காட்சிப்படலம் : "நலம் துடிக்கின்றதோ நான்செய் தீவினைச் சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ? பொலந் தொடி மருங்குலாய் புருவம் கண் முதல் வலம் துடிக்கின்றில; வருவது ஒர்கிறேன்' (32) முனிவரோடு இராமர் முதல்முதல் மிதிலைக்கு வந்த போது, என் புருவமும் தோளும் கண்ணும் இப்பொழுது போலவே இடம் துடித்தன. அதன்படி அப்போது எனக்கு இராமர் கிடைத்தார். இன்னொன்றும் கேள்! இராமர் தம்பிக்கு அரசை ஈந்து கானகம் புகுந்த போது எனக்கு வலம் துடித்தது. அதன்படி யான் இராவணனால் சிறைவைக்கப்பட்டேன்.