பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 'முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள் துனியறு புருவமும் தோளும் நாட்டமும் இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என நனி துடிக்கின்றனர்; ஆய்ந்து நல்குவாய்' (33) 'மறந்தனன் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன் பிறந்தபார் முழுவதும் தம்பியே பெறத் துறந்து கான் புகுந்தநாள் வலம் துடித்ததே' (34) நஞ்சனைய இராவணன் காட்டில் எனக்கு வஞ்சனை செய்தபோதும் வலம் துடித்தது; ஆனால் இப்போதோ இடம் துடிக்கிறது; எனவே, நீ அஞ்சாதே என்று எனக்கு ஆறுதல் கூறி உதவி புரிய ஏதோ ஒர் ஆற்றல் நிகழ இருப்பதாக உணர்கிறேன்-என்றெல்லாம் சீதை திரிசடையிடம் கூறி னாள் : நஞ்சனையான் வனத்து இழைக்க நண்ணிய வஞ்சனை நாள் வலந்துடித்த வாய்மையால் எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால்; அஞ்சலென்று இரங்குதற்கு அடுப்பது யாதென்றாள்' (35) இதற்கேற்ப அனுமன் வந்து சீதைக்கு ஆறுதல் கூறி நலம் செய்தான் அல்லவா? பின்னர்த் திரிசடை தான் அறிந்த நிமித்தம் ஒன்றைச் சீதைக்குக் கூறுகிறாள்: சீதையே! நீ ஒளி பெறவும் உயிர் செழிக்கவும் நல்லது நடக்க உள்ளது. எனது காது ஒரமாக மெல்லென்று ஒரு பொன்னிற வண்டு இ ன் னி ைச எழுப்பிக்கொண்டு போயிற்று. எனவே, உன் நாயகரிடமிருந்து தூது வரப் போகிறது; தீயவர் அழிவது திண்ணம். நான் சொல்வது உண்மை-என்று கூறினாள்: