பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 "உன்னிறம் பசப்பற உயிர் உயிர்ப்புற இன்னிறத் தேன் இசை இனிய நண்பினால் மின்னிற மருங்குலாய் செவியில் மெல்லென பொன்னிறத் தும்பி வந்து ஊதிப்போயதால் (37) ஆயது தேரின் உன் ஆவி நாயகன் ஏயது தூது வந்து எதிர்தல் உண்மையால்; தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம் என் வாயது கேள் என மறித்தும் கூறுவாள்' (38) இன்னும் கேள் எனத் திரிசடை சீதையிடம் கூறுகி றாள் : உனக்குத் தூக்கம் இன்மையால் கனவு தோன்ற வில்லை. ஆனால் யான் கண்ட கெட்ட கனாவைக் கூறு வேன்: இராவணன், தலையில் எண்ணெய் பிசுபிசுக்க, கழுதை -பேய் பூட்டிய தேரின் மேல் சிவப்பு உடை உடுத்து எமன் இருக்கும் தென் புலம் அடைந்தான். இராவணனின் மக்களும் சுற்றமும் மற்றவர்களும் தென்புலம் சென்றனர்திரும்பவில்லை. இராவணன் வளர்த்த வேள்வித் தீ அணைந்து விட்டது. அவ்விடத்தில் கறையான் கூட்டம் மிக்கிருந்தது. தூண்டா மணி விளக்கு திடீரெனப்பேரொளி வீசிற்று. இராவணன் அரண்மனை, காலையில் இடித்த இடியால் பிளவுண்டது. 'எண்ணெய் பொன்முடி தொறும் இழுகி ஈறிலாத் திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின் மேல் அண்ணல் அவ்விராவணன் அரத்த ஆடையன் நண்ணினன் தென்புலம் நவையில் கற்பினாய்' (40). 'மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும் புக்கனர் அப்புலம் போந்ததில்லையால்' (41) 'ஆண்டகை இராவணன் வளர்க்கும் அவ்வனல் ஈண்டில்; பிறந்தவால் இனங்கொள் செஞ்சிதல்; துண்டரு மணி விளக்கு அழலும்; தொன் மனை கீண்டதால் வானேறு எறியக் கீழை நாள்' (42.