பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மங்கையரின் தாலிகள் கையில் வாங்குபவர் இல்லா மலேயே தாமாக அறுந்து மார்பகத்தில் வீழ்ந்தன. மயன் மகளாகிய இராவணன் மனைவி மண்டோதரியின் கூந்தல் சரிந்தது....... 'மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர் அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால் இங்கிதின் அற்புதம் இன்னும் கேட்டியால்” (48) (தாலி வாங்குதல்’ என்னும் உலகவழக்காறு ஈண்டுள்ளமை காண்க.) 'மன்னவன் தேவியம் மயன் மடந்தைதன் பின் அவிழ் ஒதியும் பிறங்கி வீழ்ந்தன; துன்னருஞ் சுடர்சுடச் சுறுக்கொண் டேறிற்றால் இன்னல் உண்டு எனுமிதற்கு ஏது என்பதே' (49) இன்னும் ஒரு கனவு கேள்! இரண்டு சீயங்கள்! (சிங்கங் கள்) மலையிலிருந்து புலிக்கூட்டத்தை உடன் அழைத்துக் கொண்டு வந்து யானைகள் வாழும் காட்டிற்குள் புகுந்து யானைகளை வளைத்து நெருக்கிப் பிணமாகும்படி கொன்றன. வனத்தில் இருந்த மயில் ஒன்று வனம்விட்டு அப்பால் போயிற்று. என்றனள் இயம்பி வேறின்னும் கேட்டியால்: இன்றிவண் இப்பொழு தியைந்த தோர்கனா! வன்றுணைக் கோள்அரி இரண்டு மாறிலாக் குன்றிடை உழுவையம் குழுக்கொண்டு ஈண்டியே (50) 'உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம் நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன; வரம்பறு பிணம்படக் கொன்ற; மாறிலாப் புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால்' (51)