பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 இரண்டு சீயங்கள் என்பது இராம இலக்குமணரையும், காட்டுப்புலி என்னாமல் மலைப்புலிகள் என்றது கிட்கிந்தை மலைப் பகுதியில் வாழ்ந்த குரங்குப் படையையும், யானை கள் என்பது அரக்கர்களையும், மயில் என்பது சீதையையும் குறிக்கும்படி கம்பர் பாடியுள்ள திறன் மிகவும் சுவை யானது. - மேலும் திரிசடை கூறுகிறாள், ஆயிரம் விளக்குகளின் ஒளியையுடைய ஒரு திருவிளக்கினைத் திருமகள் (இலக்குமி) ஏந்திக் கொண்டு இராவணன் வீட்டிலிருந்து வீடணன் வீட்டிற்குச் சென்றாள்- என்று: கண்ட கனவைக் கூறினாள்: 'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய சேயொளி விளக்கம் ஒன்றேந்திச் செய்யவள் நாயகன் திருமனை நின்று நண்ணுதல் மேயினள் வீடணன் கோயில்; மென்சொலாய்”. (52 இராவணன் அழிய வீடணன் ஆட்சிக்கு வருவான் என்ற குறிப்பு இதில் உள்ளதல்லவா? இவ்விதமாக நான் கனா கண்டுகொண்டிருந்தபோது நீ (சீதை) என்னை எழுப்பி விட்டாய்; இன்னும், கண்ட கனவு முடிவு பெறவில்லை என்று திரிசடை கூறினாள். உடனே சீதை, திரிசடையை நோக்கி, அன்னையே! அந்த நல்ல கனவின் குறையை இன்னமும் கண்டு முடிக்க, நீ இன்ன மும் தூங்குவாயாக-என்று கைகூப்பி வேண்டினாள்: பொன்மனை புக்க அப்பொருவில் போதினில் என்னை நீ உணர்த்தினை, முடிந்தது இல் என, அன்னையே அதன்குறை காண் என்று ஆயிழை இன்னமும் துயில்கென இருகை கூப்பினாள்' (53) இந்தப் பாடல் மிகவும் சுவையானது. திரிசடை மீண்டும் தூங்கப் போவதில்லை, தூங்கினாலும் இதே