பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நகையாகிய சிரிப்பை நகைச்சுவை என ஒரு சுவையாகக் கூறல் பொருத்தம். ஆனால், அழுகையையும் சுவையாகக் கூறுதல் யாங்ங்னம் பொருந்தும் என்ற வினா எழலாம். சிரிப்பு உண்டாக்குபவரின் சொல் அல்லது. செயலைக் கண்டு பிறர் சிரிக்கின்றனர். இது நகைச்சுவை எனப்படுகிறது. இங்கே சுவை என்பது ஒரு விதமான மன உணர்வு-மனக் குறிப்பு இதே போல, அழுகைக்குக் காரணமானவர்களைக் கண்ட போது தொடர்புடையவர் அழுகின்றனர். இதுவும் ஒரு வகையான மன உணர்வேமனக் குறிப்பேயாகும். நாடகத்தில் சிரிப்பு உண்டாக்குபவரைப் பார்த்துச் சிரிப்பது போலவே, அழக்கூடிய நிகழ்ச்சி நடக்கும்போது, நடிப்பவரும் அழுகின்றார்-நாடகம் பார்ப்பவரும் அழுவது உண்டு. எனவே, அழுகையும் ஒரு வகைச் சுவையாகும். நகைச்சுவையைப் போலவே அழுகை முதலியனவும் சுவைக்கப்படுதலின், சுவை என்பது ஒப்பினான் ஆய பெயர்' என்று தொல்காப்பிய உரையாசிரியராகிய, பேராசியர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். கவையை மெய்ப்பாடு என்னும் பெயரால் தொல் காப்பியர் குறிப்பிட்டுள்ளார். சுவைப்பவரின் உள்ளக் குறிப்பு, வெளியே அவரது மெய்யில் (உடம்பில்) வெளிப் படுதலின் மெய்ப்பாடு எனப்பட்டது. நகைப்பவரின் முகத்தில் மலர்ச்சியும் சிரிப்பும் சிரிப்பொலியும் தெரிதல், கை கால்களை அசைத்துக் குதித்தல் முதலியன வெளியில் தெரியும் மெய்ப்பாடாம், அழுபவரின் உள்ளக் குறிப்பு, கண்ணிர் விடுதல், சளி சிந்துதல், அழுகையொலி