பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 எழுப்புதல், முகமும் உடலும் வாடுதல் முதலியனவற்றால் வெளிப்படுதல் மெய்ப்பாடாம். இங்கே அவலம் என்னும் அழுகைச் சுவையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இளிவு இழவு, அசைவு, வறுமை என்னும் நான் கின் காரணமாக அழுகை பிறக்கும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். 'இளிவே, இழவே, அசைவே வறுமையென விளிம்பில் கொள்கை அழகை நான்கே'- (5) என்பது தொல்காப்பிய நூற்பா. இங்கே இழவு என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உற்றாரை இழத்தல், பெறுதற்கரிய பொருளை இழத்தல் முதலியன இழவு எனப் படும். கம்பரின் சுந்தர காண்டத்தில் உற்றாரை இழந்து வருந்தும் இழவுச் சுவை நிரம்ப உள்ளது. இனி, இழவுச் சுவை உண்டாவதற்குக் காரணமான திகழ்ச்சிகள் சில வற்றைக் காண்போம் : அனுமனால் கொல்லப்பட்ட அரக்கர்களைச் சேர்ந்த அரக்கியர் பலவாறு அழுது அரற்றினர்: அரக்கியர் முழங் காலின் கீழே படியும்படி கூந்தலைத் தொங்கப்போட்டுக் கொண்டு தம் கு முதம் போன்ற வாய் திறந்து அழுத பேரொலி விண்ணை முட்டியதாம். 'குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார் வண்டு அலைத்தெழு குழல்கற்றை கால்வருடவே விண்டு அலத்தக விரைக் குமுதவாய் விரிதலால் அண்டம் உற்றுளது அவ்வூர் அழுதபேர் அமலையே." (அக்ககுமாரன் வதைப் படலம்-42)