பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தன் தளிரனைய கைகளால் அந்த உடலைத் தழுவிக் கொண்டாளாம்: - - 'ஏந்தினாள் தலையை ஒர் எழுத அருங் கொம்பனாள் காந்தன் நின்றாடுவான் உயர் கவந்தத்தினை, வேந்த! நீ அலசினாய்; விடுதியால் நடம்எனாப் பூந்தளிர்க் கைகளால் மெய்யுறப் புல்லினாள்' (47): மயன் மகளாகிய மண்டோதரி அக்ககுமாரன் என்னும் தன் மகன் மடிந்ததைப் பொறுக்க முடியாமல், கண்களி னின்றும் வெள்ளம் பெருக, கூந்தல் புழுதி படிய, வயிற்றில் அடித்துக் கொண்டு கணவனாகிய இராவணனின் கால்களில் விழுந்து கட்டிக் கொண்டு அழுது புலம்பினாள். அவளைப் போலவே மற்ற மடந்தையரும் அழுது புரண்டனர்: கயல்மகிழ் கண் இணை கலுழி கான்றுக புயல்மகிழ் புரிகுழல் பொடி அளாவுற அயன் மகன்மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் மயன்மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள்' (48). 'தாஅருந் திருநகர்த் தையலார் முதல் ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார்' (49). இங்கே இராவணன், நான்முகனுடைய மகனுக்கு மகனுக்கு மகன் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தம் தம்பி அக்ககுமாரன் இறந்ததை அறிந்த அண்ணன் இந்திரசித்து, தம்பி இறந்தான் என்ற சொல் நெஞ்சைச் சுட்டதால் வெப்பப் பெருமூச் செறிந்து வருந்தி னான். 'அரம் சுடர் வேல் தனது அனுகன் இறந்த சொல் உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்...' (பாசப் படலம்-2):