பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 தன் தம்பியை நினைக்குந் தோறும் தாரை தாரையாகக் கண்களில் நீர் சொரிய இந்திரசித்து புலம்புகின்றான். குரங் கினால் குரங்கா (தாழாத) ஆற்றல் உடைய என் தம்பி இறந்து விட்டான் என்பது மட்டுமா? இதனால் என் தந்தை யின் புகழும் அல்லவா தேய்ந்து விட்டது என்று கூறி ஏங்கு கின்றான்: 'தம்பியை உன்னுந் தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் வம்பியல் சிலையை நோக்கி வாய்மடித்து உருத்து நக்கான்; கொம்பியல் மாய வாழ்க்கைக் குரங்கினால் குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான்” (5) என்பது பாடல். இந்திரசித்து தன் வில்லை நோக்கி வாய் மடித்துச் சினந்து சிரித்தானாம். மகிழ்ச்சியால் விடும் கண்ணிரை ஆனந்தக் கண்ணிர்’ எனல் மரபு. இங்கே இந்திரசித்து கண்ணிர் சொரிந்தபடியே சிரித்தான். எனவே, இதைக் கண் ணிர்ச் சிரிப்பு-அழுகைச் சிரிப்பு' என்று கூறலாமா? இந்திரசித்து பின்பு தந்தை இராவணனை அடைந்து தம்பிக்காக வருந்தியபடி அவன் கால்களில் விழுந்து கட்டிக் கொண்டு அழுதான் . இராவணனும் இந்திரசித்தின் தோளைத் தழுவிக் கட்டிக்கொண்டு அழுது சோர்ந்து போனான். பெண்டிர் எல்லாரும் வயிற்றில் அடித்துக் கொண்டு அலறி மயக்க முற்றனர்: "தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும் தோள் இணை பற்றி ஏந்தித் தழு வினன் அழுது சோர்ந்தான்