பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வாள் இணை நெடுங்கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, மீளிபோல் மொய்ம்பி னானும் விலக்கினன் விளம்பலுற்றான்' (8) தன் கண் அனைய-உயிர் ஒத்த அரக்க மறவர்கள் எண்ணற்றவர் இறந்து கிடத்தலைக் கண்ட இந்திரசித்து, வாய் மடித்துச் சினந்து, புண்ணிலே கோல் பாய்ச்சினாற் போன்ற துன்பத்துடனும் மானத்துடனும் மனம் புழுங் கினான்: 'கண் அனார் உயிரே ஒப்பார் கைப்படைக் கலத்தின் காப்பார் எண்ணலாம் தகையர் அல்லர் இறந்து எதிர் கிடந்தார் தம்மை மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயாப் புண்ணுளே கோல் இட் டன்ன மானத்தால் புழுங்குகின்றான்' (17) குருதி கடல் எனப் பெருகி ஒடப் பிணக் குவியல்களை இடறிக் கொண்டு போன இந்திரசித்து தம்பியின் உடலைத் தேடிக் கண்டான். அப்போது இந்திரசித்தின் கண்கள் நெருப்பிலே காய்ச்சிய செம்பைப் போலச் சிவந்து காணப் பட்டன. 'நீப்புண்ட உதிரவாரி நெடுந்திரைப் புணரி தோன்ற ஈர்ப்புண்டற் கரிய வாய பிணக்குவடு இடறிச்செல்லான தேய்ப்புண்ட தம்பி யாக்கை, சிவப்புண்ட கண்கள் தீயில் காய்ப்புண்ட செம்பின் தோன்றக் கறுப்புண்ட மனத்தன் கண்டான்' (19)