பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226, என்பதை உரையில் கோடல்' என்னும் விதிப்படி வரு வித்துத் தாமரை போன்ற வதனம் (முகம்) எனக் கொள்ள வேண்டும். இந்தப் பாடலில் 'மலர்க்கை எனக் கைமலராக உருவகிக்கப்பட்டுள்ளது. கையைக் காந்தள் மலராகச் சொல்வது மரபு. கையை (காந்தள்) மலராக உருவகித் தாற்போல், வதனத்தை (தாமரை) மலராக உருவகித்துக் காட்டவில்லை. கை ஒன்றை மட்டும் உருவகித்திருப்பதால் இதனை ஓர் இட உருவக அணி' (ஏக தேச உருவக அணி) என்று கூறுவர் புலவர்கள். இராவணன், வெய்துயிர்ப்பு (பெருமூச்செறிதல்). என்னும் அம்மியின் மேல், தன் உயிராகிய அரைபொருளை இட்டு, சீதை மேல் உள்ள காதலாகிய தண்ணிரை ஊற்றி அரைக்கின்றானாம். இது முற்றிலும் உருவகம். பாடல்: 'காவியம் கண்ணிதன் பால் கண்ணிய காதல் நீரின் ஆவியை உயிர்ப்பு என்றோதும் அம்மி இட்டு அரைக்கின்றானை' (211). கருங்கடல்லே புறப்படு மலையில் (உதயகிரியில்): ஞாயிறு தோன்றியிருப்பது போல், கரிய இராவணனது மலை போன்ற மார்பில் பன்மணி மாலைகள் ஒளி வீசு கின்றனவாம். 'தழுவா நின்ற கருங்கடல்மீது உதயகிரியில் சுடர் தயங்க எமுவான் என்ன, மின் இமைக்கும் ஆரம்புரளும் இயல்பிற்றாய்...மார்பானை' (214). முகிலைக் கிழித்துத் துவளும் மின்னல் போல, இராவணனின் மார்பில் பூணுால் விளங்கிற்றாம்: 'சூல் நிறக் கொண் மூக் கிழித்து இடைதுடிக்கும் மின்என மார்பில் நூல்துளங்க' (காட்சிப் படலம்-78)