பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 அரக்கரின் தீமையோ? ஒருவர்க்கு இந்த நிலைமை இயலுமோ? இனிச் சீதைக்கு வரக்கூடிய துன்பம் யாது? ஒன்றும் இருக்க முடியாது. தீவினை அறத்தை உண்மை யாக வெல்ல முடியுமோ? (முடியாது). செல்வமோ அது, அவர் தீமையோ இது; அல்லினும் பகலினும் அமரர் ஆட் செய்வார். ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி? வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்? (72) அறத்தைத் தீவினை வெல்லுமோ-வெல்லாது-என்பது பொது உண்மை. சீதை இராவணனைக் கடிந்து பேசுகின்றாள். நீ 'பெற்ற வாள்.டவாழ் நாள்-வன்மை-வரம் முதலிய யாவும் இராமனது அம்பால் அழிந்துவிடும். விளக்கின் முன் இருள் இருக்க முடியுமா? இராமன் முன் நீ அழிவாய்! "பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் மற்றுடை எவையும், தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை வில்தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம்; சிற்றுசிடை இறுதல் மெய்யே; விளக்கின் முன் இருள் உண்டாமோ?" (117) விளக்கின் முன் இருள் உண்டாமோ?-இருக்க முடி யாது-என்பது பொது உண்மை. அனுமன் சீதையிடம், காட்டில் இராமன் வருந்திக் கொண்டிருக்கும் நிலையைக் கூறுகிறான்: இராமன் மயக்கம் கொண்டு, ஐம்புலன்களும் வேறாகிச் சிவனே போல் உன்மத்தம் உடையவனாய்க் காணப்படுகிறான். கருமத்தை உலகில் கடந்துவெல்பவர் யார்? ஒருவரும் இலச்: