பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239, ஞாயிறு தோன்றி முற்றிலும் இருட்டை ஒட்டுகிறது. தாமரை மொக்குக்குள்ளே இருள் மறைந்திருக்குமோ என்று ஐயுற்று தன் கதிராகியடஒளியாகிய கையால், தாமரை மொக்கின் இதழைத் திறந்து பார்க்கிறது-என்று புலவன் தானாக ஒரு காரணத்தைக் குறித்து ஏற்றுகிறான். இக தான் தற்குறிப் பேற்ற அணி யாகும். இனிக் கம்பரிடம் செல்வாம்: அரக்கியர் சிலர் பல நாளாக இராவணனோடு உடலுறவு கொள்ளாமையால் காம வேட்கையால் வருந்து கின்றனர். காம உணர்வாகிய வெப்பம் அவர் தம் முலை கள் உட்பட்ட உடல் உறுப்புகளைச் சுடுகிறது. காதலரைப் பிரிந்த மாதர்க்கு மலர் முள்ளாகக் குத்துவதாகவும், இனிய தென்றல் காற்றும் தண்ணிய திங்களும் அனல் வீசுவதாக வும் கூறுவது இலக்கியமரபு. அதாவது, காம வேதனையின் போது, இன்பப் பொருள்கள் எல்லாம் துன்பம் தருவதாகத் தெரியுமாம். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கம்பர் ஒரு தற்குறிப்பு ஏற்றுகிறார்: முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தும் இராவணன் மேல் உள்ள வெறுப்பாலும் சினத்தாலும், அவன் பால் அன்பு கொண்ட அரக்கியரைப் பகை கொண்டு வருத்த எண்ணி, குளிர்ந்த திங்கள் (சந்திரன்) அரக்கியர் களின் முலைகளைச் சுடுகின்றானாம், அதனால் அவர்கள் துடிக்கின்றார்களாம். 'புரியும் நன்னெறி முனிவரும் புலவரும் புகலிலாப் பொறை கூர, எரியும் வெஞ்சினத்து இகல் அடு கொடுந்திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் பரியும் நெஞ்சினர் இவர் என அயிர்த்து ஒரு பகைகொடு பனித் திங்கள் சொரியும் வெங்கதிர் துணை முலைக்குவை சுடக் கொடிகளின் துவள்கின்றார்' (ஊர் தேடு படலம்-191)