பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இது ஒரு தற்குறிப்பேற்ற அணி அமைந்த பாடலாகும். அடுத்தது: திங்கள் (நிலா) இயற்கையாக மறைகிறது. ஆனால் கம்பர் குறித்தேற்றியுள்ள காரணமாவது: இராவணன் தன்னை நோக்கி, சீதையின் மேல் உள்ள காமவேதனையால், நிலவே, நீ என்னைச் சுட்டாய்அனுமன் பொழிலை அழிக்கப் பார்த்துக் கொண்டு வாளா இருந்தாய்-என்று தன்மேல் சினம் கொள்வான் என்று அஞ்சியவன்போல் திங்கள் மறைந்தான்: 'தொண்டையங் கனிவாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய் விண்ட வானவர் கண்முன்னே விதிபொழில் இறுத்து வீசக் கண்டனை நின்றாய் என்று, காணுமேல் அரக்கன் காய்தல் உண்டென வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான்' (பொழில் இறுத்த படலம்-40) இது கம்பரின் ஒரு தற்குறிப்பேற்றம். அடுத்தது: அணிகலன்களுக்கு அரசாகிய சூடாமணியைத் தன் உயிரான இராமனிடம் கொடுக்கும்படி சீதை அனுமனிடம் கொடுத்து விட்டதால், இப்போது ஓர் அணியும் இல்லாத வறியவளாய் உள்ளாள் எனக் கடல் இரக்கமுற்று ஒரு சூடாமணியைக் (கடல்) கொடுப்பது போலக் கடலிலிருந்து ஞாயிறு தோன்றினான்: 'உறுசுடர்ச் சூடைக்காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு அறிகுறியாக விட்டாள், ஆதலான் வறியள் அந்தோ!