பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 செறிகுழல் சீதைக்கு அன்று, ஒர் சிகாமணி தெரிந்து வாங்கி எறிகடல் ஈவை தென்ன எழுந்தனன் இரவி என்பான்' (பொழில் இறுத்த படலம்-45) இயற்கையாக எழுந்த ஞாயிறை, கடல் சீதைக்காகக் கொடுத்த சூடாமணியாகக் கம்பர் தற்குறிப்பேற்றம் செய் துள்ளார். இவ்வாறு இந்த அணியின் வாயிலாகக் கம்பர் தம் காப்பியத்திற்குச் சுவையேற்றியுள்ளார். ஒருவர்க்கு அழகூட்டும் அணிகலன்கள் போல் பாட லுக்கு அழகு ஊட்டுவது அணியாகும். அணியை வட் மொழியில் அலங்காரம்’ என்பர். மேலே கூறப்பெற்றுள்ள உவமை அணி, உருவக அணி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, தற்குறிப்பேற்ற அணி போன்றவை, பாடலுக்குப் பொருளால்-கருத்தால் அணி (அழகு) செய்தலின், பொருள் அணி எனப்படும். சொல்லால் -சொல் விளையாட்டால்-சொற்றொடர் விளையாட்டால் பாடலுக்கு அணி செய்பவை சொல்லணி எனப்படும். அச் சொல்லணிகளுள் மடக்கு அணி என்பது ஒன்று. இதனை யமக அணி என்றும் கூறுவர். மடக்கு அணி எழுத்துகளின் தொகுதியான குறிப்பிட்ட ஒரு சொல்லோ-ஒரு சொற்றொடரோ, இடையில் வேறு ஒர் எழுத்துக்கூட வராமல் தானே திரும்பத் திரும்ப மடங்கி வந்து வெவ்வேறு பொருளைத் தருமாயின் அது மடக்கு அணி' எனப்படும். மடங்கி மடங்கி (திரும்பத் திரும்ப) வருவதால் அது மடக்கு அணி என்னும் பெயர் பெற்றது.