பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சேர்ந்தன = அலைகளை அடைந்தன. தந்து = (சில மரங்கள்) வீசப்பட்டு, வாரம்= (வீட்டு) வாயிலின், புதவொடு=கதவுகளோடு, தாள் அற= தாழ்ப்பாள்கள் அற்று விழும்படியும், தம் துவாரம் = அவற்றின் துளைப் பகுதி, துகள்பட= தூளாகும்படியும், சாய்ந்த = வந்து விழுந்தன. அடுத்தது: 'நந்த வானத்து நாள் மலர் நாறின, நந்த வானத்து நாள் மலர் நாறின, சிந்து வானந் திரிந்துகச் செம்மணி சிந்து வானந் திரிந்த திரைக்கடல்” (35) மற்ற நான்கு பாடல்களிலும் இப்பாடலில் கம்பர் மடக்கைச் சிறிது மிடுக்கு செய்துள்ளார். நந்தவானத்து நாள் மலர் நாறின-என்னும் முழு அடியும் அடுத்தஇரண்டாம் அடியாக மடங்கி வந்துள்ளது. சித்து வானந் திரிந்து' என்பது, பின் இரண்டடிகளின் தொடக்கத்தில் மடங்கியுள்ளன. இனி இப்பாடலைப் பின் வருமாறு பிரித்து அமைத்துப் பொருள் கொள்ளவேண்டும் : 'நந்த வானத்து நாள் மலர் நாறின, நந்த, வானத்து நாள் மலர் நாறின; சிந்து அ(வ்)வானம் திரிந்து உக, செம்மணி சிந்த, வால் நந்து சிரித்த திரைக்கடல்' கருத்துரை : அனுமன் சிதைத்ததால் நந்தவனத்தில்பூந்தோட்டத்தில் இருந்த மலர்கள் விரிந்து மணம் வீசினவிண்ணிலே உள்ள ஒளிமலர்கள் (விண்மீன்கள்) மிகவும் விளங்கின. புளியமரங்கள் கடலில் உள்ள அலைகளின் மேல் சுழன்று விழ, வெண்மையான சங்குகள் செம்மை யான (சிறந்த) முத்து மணிகள் சிதறும்படி அஞ்சியோடின. பதவுரை : நந்த வ(ா)னத்து=பூந்தோட்டத்திலுள்ள. நாள் மலர்=அன்று பூத்த மலர்கள், நாறின= மணம் வீசின; வானத்து=விண்ணிலே உள்ள, நாள் மலர் = ஒளி