பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அக்ககுமாரன் அனுமன்மேல் எய்த அம்புகள் வாயி லிருந்து நெருப்பை உமிழ்ந்தனவாம்: எய்தான் வாளிகள், எரிவாய் உமிழ்வன”-(10-33) அம்பு வாயிலிருந்து நெருப்பை உமிழ்வதில்லை. மிகவும் கடுமையாயிருந்தன என்பதை இவ்வாறு சுட்டியுள்ளார். அனுமன் இலங்கையை எரியூட்டிய போது, மரங்கள், ஊழிக் கால நெருப்பு (கனல்) பருகுகின்ற (குடிக்கிற) மகர வேலையைப் போல் வெந்தனவாம்: பகரும் ஊழியின் கால வெங் கடுங் கனல் பருகும் மகர வேலையின் வெந்தன.” 13-23) கனல் பருகுவது-குடிப்பது இல்லை. நீச்சுடர் உலகை விழுங்கிற்றாம்: 'கொழுஞ் சுடர் உலகெலாம் விழுங்கி (13-24) விழுங்குவது சுடரின் வினையன்று. இராவணன் மனையில் பற்றிய நெருப்பு, ஆங்கிருந்த நீர் முழுதும் வற்றும்படி பருகியதாம்-குடித்ததாம். 'உயர்தீ.நீரை வற்றிடப் பருகி (13-32) நெருப்பு எதை யும் பருகுவது இல்லை. ஊழிக்கனல் உலகை உண்ணுமாம்-சாப்பிடுமாம்! ● ● 曼 • .. 哆 "ஊழி வெங்கனல் உண்டிட (13-35)-கனல் உண்ணுவ தில்லை. நெருப்பு பருகுவது மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. “நின்று சுற்று எரி பருகிட (13-36)