பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 என்பது பாடல். அரக்கரும் அரக்கியரும் கழித்து எறியும் அணிகலன்களால் தெருக்கள் துர்ந்தனவாம். நகரிலிருந்து பல்வேறு பொருள் சளும் போய்ச் சேர்வதால் ஆழி (கடல்) மிகவும் ஆழ்ந்ததாகிறது. இலங்கையின் மாட மாளிகை மதில்களின் மணி செறிந்த ஒளியை நோக்க ஞாயிறு மின் மினியாம். இம்மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் , ன் எய்தும் மின்மினி அல்லனோ அவ் வெயில் கதிர் வேந்தன் அம்மா' (96). இது பாடல். உயரிய பண்பினளாய சீதையின் முகத்தை ஒத்திருத்தலால், அருகில் உள்ள தாமரை மலர்கள் குவிய வில்லை. 'நறவு நாறிய நாள் நறுந் தாமரை துறைகள் தோறும் முகிழ்த்தன தோன்றுமால் சிறையின் எய்திய செல்வி முகத்தொடு உறவுதாம் உடையார் ஒடுங்கார்களோ? (151) தண்ணிரைச் சார்ந்துள்ள கரைகளில் பதிக்கப் பெற்றுள்ள பளிங் குக் கற்களுக்கும் தண்ணிருக்கும் வேற்றுமை தெரியவில்லை. தெளிந்த சிந்தையுடைய நல்லோரும் அற்பரோடு சேர்ந்தால் அவர்களைப் போன்ற, வர்களாகவே எண்ணப்படுவார்கள் போலும்! 'பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி விளிம்பும் வெள்ளமும் மெய்தெரியாது; மேல் தெளிந்த சிந்தையரும் சிறியார்களொடு அளிந்த போது அறிதற்கு எளிதாவரோ? (152) இது பாடல். துரியோதனன் பளிங்குத் தளவரிசையைத் தண்ணிர் என்று எண்ணித் தன் கணுக்கால் உடையைச்