பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 சிறிது மேலே உயர்த்தியதைக் கண்டு திரெளபதி சிரித்த தனாலன்றோ பெரிய வம்பு நேர்ந்தது. இது பாரதக் கதை, பல நிற மணிகளின் ஒளி படலால், பாற்கடல், நீலக் கடல் முதலிய பன்னிறக் கடல்களும் கலந்தது போல் அக காணப்பட்டதாம். - 'நீலமே முதல் நல் மணி நித்திலம் மேல கீழ பல்வேறு ஒளி வீசலால் பாலின் வேலை முதல் பல வேலையும் கால் கலந்தனவோ எனக் காட்டுமே” (153) என்பது பாடல். இவ்வாறு பல கற்பனைகளைச் சொரிந்து காப்பியத்தை நயப்படுத்தியுள்ளார் கம்பர்.