பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இரும்புக் கோட்டை ஆகிய முப்புரங்களையும் சிரித்தே எரித்தார் என்னும் புராணக் கதையைக் கம்பர் பல இடங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 'தொல்புரம் அட்டான்' (ஊர்தேடு படலம்-82) 'வென்றவன் புரங்கள் வேவத்தனிச்சரம் துரந்தமேரு' (காட்சிப் படலம்-118) "புரஞ்சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய பரஞ்சுடர்' (பாசப்படலம்-2) 'மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசன்' (23) சிவனை மதிக்காமல், தாங்கள் பெரியவர்கள் என்ற அகம் கொண்ட தாருகாவனத்து அந்தணர்கள், சிவனுக்கு எதிராக வேள்வி செய்து, அதிலிருந்து வந்த யானையையும் புலியையும் மழுவையும் முயலகனையும் இன்னும் பிற பொருள்களையும் சிவனை அழிக்கும்படி ஏவி அனுப்பினா ராம். வந்த யானையைச் சிவன் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்டாராம்; புலியைக் கொன்று அதன் தோலை . ஆடையாக உரித்துக் கட்டிக் கொண்டாராம், மழுப்படையைக் கையில் ஏந்திக் கொண்டாராம் முயலகன் என்னும் அரக்கனைக் காலின் கீழ் போட்டு மிதித்தாராம். இப்போதும் நடராசர் சிலையின் காலடியில் ஒருவன் மிதிப்பட்டுக் கிடப்பதைக் காணலாம். இவ்வாறு அகம் கொண்ட அந்தணர்களைச் சிவன் வென்றா ஏாம். பாடல் : 'கரித்த மூன்று எயிலுடைக் கணிச்சி வானவன், எரித்தலை அந்தணர் இழைத்த யானையை உரித்தபேர் உரிவை' இது பாடல் பகுதி. (ஊர்தேடு படலம்.ட42)