பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 யானையின் தோல் மக்களின் தோல் போலவே உரிக்க முடியாதது. சிவன் எல்லாம் வல்லவராதலின் உரித்தா ராம். இப்போது கூட, வலியவர்கள் மெலியவர்களை நோக்கித் தோலை உரித்து விடுவேன்' என்று சொல்வதைக் கேட்கலாம். இந்தக் கதை, நானே கடவுள் (அஹம் பிரம் ஹாஸ்மி) என்னும் அத்வைதக் கொள்கையைச் சைவ சித்தாந்திகள் சாடும் கதையாகும். இவ்வாறு பல புராண வரலாறுகள் சுந்தர காண்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.