பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிறப்புச் செய்திகள் கம்பர் சுந்தர காண்டத்தில் சிறப்பு மிக்க செய்திகள் பலவற்றைத் தெரிவித்துள்ளார். அவற்றுள் சில காண்பாம்: அனுமன் கடலைத் தாண்டிய போது அவன் உடம்பு iசிய காற்றினால், கடலில் இருந்த திமிங்கிலகிலங்களோடு மற்ற மீன்களும் அலைப்புண்டு இறந்து மிதந்தனவாம். திமிங்கில கிலம் என்பது, அளவு சொல்ல முடியாத தொலை வுக்கு நீண்டு பருத்த உயிரியாம். அதன் அளவைக் கூற முடியாதென மக்களும் (தேசமும்) நூல்களும் சொல்லும் பேருரு உடையதாம்: 'ஒசனை உலப்பிலாத உடம்பு அமைந்துடைய என்னத் தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்' (கடல் தாவு படலம்-37.) அளவிட முடியாத நீளம் உடையது திமிங்கிலகிலம் என்று தேச மக்களும் சொல்கின்றனராம்; நூல்களும் சொல்கின்றனவாம். மக்கள் சொல்வதைக் காதால் கேட்டறியலாம். இது பற்றிச் சொல்லும் நூல்களுள்