பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 யெழுச்சி-4) வீணையைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இன்னும் பல உள. ஞாயிறு கீழ்க் கடலில் தோன்றுவதாகவும், கிழக்கு மலையில் தோன்றுவதாகவும், மேல் கடலில் மறைவதாகவும் டபலவிதமாகக் கம்பர் கூறியுள்ளார்.

வாரியின் எழுசுடர்க் கடவுள் வாணனவன்'

(-பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம்.39) "தமுவா நின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க எழுவான் என்ன மின்னிமைக்கும் ஆரம்புரளும் இயல்பிற்றாய்??(ஊர் தேடு படலம்-214) 'உதய மால் வரையின் மீப்படர் - வெங்கதிர்ச் செல்வர்' (காட்சிப் படலம்-81) "வெய்யோன் குடகடல் குளிப்பதானான்' (ஊர் தேடு படலம் 40) என்பன பாடல் பகுதிகள். தென்னிந்தியாவின் கிழக்கு எல்லை வங்கக் கடலாகவும், மேற்கு எல்லை அரபிக் கடலாகவும் உள்ளன. அதனால், ஞாயிறு கீழ்க் கடலில் தோன்றுவதாகவும் மேல் கடலில் மறைவதாகவும் (படுவ தாகவும்) கூறல் மரபு. ஞாயிறு மேற்குக் கடலில் மறைவ தால், மேற்குக் கரையில் உள்ள மலையாளிகள் படு ஞாயிறு (படி ஞாயிறு) என மேற்குத் திசைக்கு மலையாளத்தில் பெயர் வைத்துள்ளனர். இது நிற்க, உதயகிரி (தோன்றும் மலை) என்னும் மலையில் தோன்றுவதாகவும், அஸ்தகிரி (மறையும் மலை) என்னும் மலையில் (அஸ்தமனம்) மறைவதாகவும் கூறும் கொள்கை எவ்வாறு பிறந்தது என்பதைக் காண வேண்டும்: 品一3