பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 என்பது எழுபத்திரண்டு நிமிடத்தைக் குறிக்கும் எனவே, இராமன், இந்திரனுக்குத் தொல்லை தந்த கரன் முதலான பதினாலாயிரம் படையை எழுபத்திரண்டு நிமிடத்தில் அழித்து விட்டான் எனப் பொருள் கொள்ள வேண்டி வரும் எழுபத்திரண்டு நிமிடத்தில் உண்மையில் அழிக்க முடியாது. உயர்வு நவிற்சி அணியாக இவ்வாறு கூறப்பட் டுள்ளது. இந்த உயர்வு நவிற்சியின் அடிப்படையில். இன்னும் குறைந்த நேரத்தில் வென்றதாகக் கூற வேண்டும். அப்படிப் பார்த்தால், கன்னல் என்பதை, இன்னும் மிகச் சிறிய கால அளவாகக் கொள்ள வேண்டும். இராமன் குகனிடம், என் தம்பி இலக்குமணன் உன் தம்பி; நீ என் தோழன்; சீதை உன் கொழுந்தி என்று கூறினானாம். 'ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள்'-(23) இலக்குமணன் குகனுக்குத் தம்பி எனின், குகன் இராமனுக்கும் தம் பியாகிறான். எனவே, குகனுக்கு இராமன் அண்ணன் ஆகிறான். அண்ணன் இராமனின் மனைவி யாகிய சீதை குகனுக்கு அண்ணி ஆகிறாள். இங்கே, ‘அண்ணி என்னா மல், கொழுந்தி' எனக் கூறியதாகக் கம்பர் குறிப்பிட்டிள்ளார். - தென்னார்க்காடு மாவட்டத்தில், ஒருத்திக்குத் தன் கணவனுடன் பிறந்தவர்களுள், கணவனை விட மூத்த ஆடவர் மூத்தார் எனவும், கணவனை விட இளைய ஆடவர் கொழுந்தனார் எனவும், முறை வழங்கப்படுகின்றனர். ஒருவனுக்குத் தன் மனைவியுடன் பிறந்த மகளிர் அனைவரும் கொழுந்தி எனவும் முறை வழங்கப்படு கின்றனர். இதன் படி நோக்கின், சீதை, குகன் மனைவி