பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 யுடன் பிறந்தவள் ஆகிறாள், சில குடும்பங்களில் அண்ணன்-தம்பிகள், அக்காள்-தங்கையைக் கட்டிக் கொள்வதுண்டு. அதாவது, அண்ாைன் அக்காளையும். அவன் தம்பி அவள் தங்கையையும் மணப்பதுண்டு. இது மிக நெருங்கிய உறவாகிறது. இந்த அண்ணனுக்குத் தம்பி யின் மனைவி கொழுந்தியாகிறாள்; இந்தத் தம்பிக்கு அண்ணனின் மனைவி அண்ணியாவதோடு கொழுந்தியும் ஆகிறாள். இத்தகைய மிகுந்த பிணைப்பிலேயே குகனுக்குச் சீதை அண்ணியாவதன்றிக் கொழுந்தியும் ஆகிறாள். கம்பரின் இந்தச் சொல்லாட்சியைக் நோக்குங்கால், இராமனும் குகனும் மிகவும் நெருங்கியவர்கள் ஆகிறார்கள். இந்தப் நயப்பொருள் கம்பரின் பாடலிலே அமைந்துள்ளது. கொழுந்து-இளமை என்னும் பொருளில் கொழுந்தி கொழுந்தனார் என்னும் பெயர் ஆட்சிகள் மலர்ந்தன. இராவணன் சீதையைக் கண்டு பேச அசோகவனத் திற்கு வந்த போது இருந்த அவனது உருவத்தோற்றம் பற்றிப் பலவாறு கம்பர் புனைந்துரைத்துள்ளார். அவன் மார்பில் பூணுால் இருந்ததாகக் கூறியுள்ளார். முகிலைக் கிழித்து இடையே மின்னும் மின்னலைப்போல, அவனது கரிய மார் பின் நடுவில் பூணுரல் மின்னிற்றாம். இது பொன் னாலான பூனூலாகும். 'சூல்நிறக் கொண்மூக் கிழித்து இடைதுடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க'- (78) என்பது பாடல் பகுதி. இராம-இராவணப் போரை, ஆரியர்-திராவிடப் போர் என்பர் சிலர். அதாவது, இராமனை ஆரியனாகவும் இராவணனைத் திராவிடனாக வும் இவர்கள் கூறுவர். இதை எதிர்த்து, இராவணன் தான் ஆரியன் என்று கூறுவர் சிலர். இவ்வாறு கூறுபவர் சொல்லும் காரணங்களாவன : 1. இராமன் பூணுரல் அணிந்திருக்கிறான்.