பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 (உருக் காட்டு படலம்-32) என்பது பாடல் பகுதி. பின்னும் ஒரு பாடலில் வெள்ளம் இரண்டினொடு' (36). என்றும் மற்றும் ஒரு பாடலில் 'வெள்ளம் எழுபது உள தன்றோ’ (115) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளம் என்பது ஒரு பேரெண்ணைக் குறிக்கிறது. அதன் அளவை இப்போது கணித்தறிய முடியவில்லை. பண்டைக் காலத்தில் அதற்குத் தக்க அளவுப் பொருள் இருந்திருக்கும். இப்போதும் உலக வழக்கில், அது மிகமிக-மிகுதி என்னும் பொருளில் அது வெள்ளம்' என்னும் வழக்காற்றைக் கேட்கலாம். நீரின் பெருமிகுதியையும். வெள்ளம் என்கிறோம். மலையாள மொழியில் வெள்ளம் என்பது நீரைக் குறிக்கிறது. இந்த வழக்காறு மலையாளப் பகுதியின் நீர்ப் பெருவளத்தைக் குறிக்கிறது. வீணாய்க் கடலில் கலக்கும் கேரள ஆறுகளைத் தமிழகத்தின் பக்கம் அருட்கண் செலுத்துமாறு தமிழகம் வேண்டுவது அறிந்: ததே. வெள்ளத்திற்கு எதிர் மறையான சிறிய அளவு: 'இ மி' என்பது. சுமார் முப்பத்தையாயிரத்தில் ஒரு பகுதிக்கு 'இம்மி என்று பெயராம். மக்கள் உருவத்தைப் புனைவதில் (வருணிப்பதில்). அடி முதல் முடிவரை (பாதாதிகேசம்)யாகவும், முடி முதல் அடி வரை (கேசாதி பாதம்) யாகவும் செய்வதுண்டு. அனுமன் சீதையிடம், இராமனின் உருவ அடியாளத்தை அடிமுதல் முடி வரையிலும் (பாதாதி கேசம்) ஆகத் தெரிவித்தானாம். 'அடி முதல் முடியின் காறும் அறிவுற. அனுமன் சொன்னான்' (38) என்பது பாடல் பகுதி. இராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைச் சீதை அனுமனிடமிருந்து பெற்றதும், விழி இழந்தவர் விழி. பெற்றது போல் மகிழ்ந்தாளாம்: 'உழந்து விழி பெற்றது ஒர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்” (65) இங்கே, விழி இழந்தவர் உயிர்ப்பொறை" என்னும் தொடரால் குறிக்கப்பட்டுள்ளார். உயிர்ப்பொறை.