பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாட்டா-என்கிறார். மாணிக்கவாசகர் தமது திருவாசகம். திருவண்டப் பகுதியில், 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன: (1, 2) எனக் கோளங்கள் நூற்றொரு கோடிக்கு மேல் உள்ளன வாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு விண்மீனும் ஒவ்வொரு கோளமாகும். குறிப்பிட்ட பிறவிகளின் மிக்க எண்ணிக் கைக்கு ஒர் உடுவை(விண்மீனை) உறையிடினும், எல்லாப் பிறவிகட்கும் உறையிட விண்மீன்கள் போதமாட்டா என் கிறார். இவ்வாறே பத்து வானரர்கட்கு ஒர் அரக்கர் என்ற விகிதத்தில் உறையிடினும் வானரர்கள் மிக்கிருப்பர்; உறையிட அரக்கர்கள் அனைவருமே போதமாட்டார். கம்பர் மாதம் என்பதைத் திங்கள் என்னும் தமிழ்ச் சொல்லாலேயே பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். கன்னட மொழியில் மாதம் என்பதற்குத் திங்கள் என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. உலகம் (7+7 =) பதினான்கு உலகம் இருப்பதாகச் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. (சூடாமணிப் படலம்:-) 'ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம்" (50) என்பது பாடல் பகுதி. 'ஏழுக்கு ஏழ் அடுக்கிய உலகங்கள்' (இலங்கைஎரியூட்டு படலம் -38) அனுமனிடம் சீதை தந்த சூடாமணி, கோள்களின் வேந்தனாகிய ஞாயிறு போல் ஒளி வீசியதாம்: கந்தல் மென்மழை கொள் முகில்மேல் எழுகோளின் வேந்தன் அன்னது...' (சூடாமணிப்படலம்-82) ஞாயிறு கோள்களுக்கெல்லாம் தலைவன் என்பதாகக் கம்பர் கூறியிருப்பது, இன்றைய வான அறிவியலுக்கும்