பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பொருத்தமாயுள்ளது. ஞாயிறு குடும்பத்தைச் சேர்ந்தனவும் ஞாயிற்றிலிருந்து பிரிந்து வந்தனவும் - ஞாயிற்றின் ஒளியைத் தாம் பெற்று மிளிர்வனவும்-ஞாயிற்றைச் சமதளத்தில் இடப்பக்கமாகச் சுற்றி வருவனவும் ஆகிய ஒன்பது கோள்கள் உள்ளன. அவை ஏறு வரிசையில் வருமாறு: 1. புதன் (Mercury), 2. வெள்ளி (Wenusடசுக்கிரன்) 3. 1416 (Earth), 4. QG dijalirů (Mars), 5. sumpsit (Jupiterகுரு), 6. சனி (Saturn), 7. யுரேனஸ் (Uranus) 8. நெப்டியூன் (Neptune), 9, புளுட்டோ (Pluto) என்பனவாம். பூமியின் துணைக் கோளாகிய திங்களும், சொந்தவீடு இல்லாதன வாகக் கூறப்படும் இராகுவும் கேதுவுங்கூட ஞாயிற்றையே தலைவனாகக் கொண்டுள்ளவை. இந்தக் கருத்துக்களையெல்லாம் உள் ள ட க் கி, ஞாயிற்றைக் கோளின் வேந்தன்' எனக் கம்பர் மொழிந் துள்ளார். சூடாமணி ஞாயிறு போல் ஒளி வீசிற்றாம். உள்ளே வர அஞ்சி வெளியிலேயே சுற்றிய ஞாயிறு அஞ்சாமல் நகருக்குள் வந்து விட்டானோ என்று அரக்கர்கள் ஐயுற்றனராம். ஆண் சக்கரவாகப் பறவையும் பெண் சக்கரவாகப் பறவை யும் உடலுறவு கொண்டனவாம். குவிந்திருந்த தாமரைகள் மலர்ந்தனவாம். ஞாயிறு காந்தக் (சூரிய காந்தக்) கற்கள் வெப்பம் கக்கினவாம்: 'மஞ்சலங்கு ஒளியோனும் இம்மா நகர் வந்தான், அஞ்சலன் என வெங்கண் அரக்கர் அயிர்த்தார்; சஞ்சலம்புரி சக்கர வாக முடன் தாழ் கஞ்சமும் மலர்வுற்றன; காந்தின காந்தம்' (81) சக்கரவாகப் புட்கள் இரவில் இரைதேடிவிட்டுப் பகலிலே உடல் உறவு கொள்ளும் என்னும் செய்தி இப்பாடலால் அறியப்படும்.