பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பார்ப்பதற்குத் திங்கள் விண்மீன்களைவிடப் பெரிதாய்த் தெரிவதால் அதனை உடுவின் கோமான்’ என்றார் கம்பர். 'உடுவின் கோமான்' என்பதற்கு, இன்னொரு விதமாக வும் பொருள் கூறிக் கம்பரைக் காப்பாற்ற முடியும். அசுவனி, பரணி முதல் இரேவதிவரையுள்ள இருபத்தேழு விண்மீன் களையும் (நட்சத்திரங்களையும்) திங்களின் மனைவிமார் கள் என்று புராண வரலாறு கூறுகிறது. இவற்றுள் "உரோகிணி விண்மீன்மேல் திங்களுக்கு விருப்பம் மிகுதிஅதனால் தொல்லை ஏற்பட்டது என்றெல்லாம் கதை கூறப் படுகிறது. இந்த வகையிலும் உடுவின் கோமான்’ என்னும் பெயருக்குத் திங்கள் பொருத்தமாவதை அறியலாம். இது குறித்துப் புலவர் ஒருவர் பின்வருமாறு ஒரு பாடல் பாடினார்: "வான் உலாவும் சோமனுக்கோ தையல் இருபத்தேழு; என் இ.ை உலாவும் சோமனுக்கோ தையல் எண்ணித் தொலையாது', என்பது அவரது பாடல். சோமன்-திங்கள்,துணி, தையல்பெண், கிழிந்ததைத் தைத்திருக்கும் தையல். இது ஒரு தனிப் பாடல். உடுவின் வேந்தன்' என்னும் பெயர்; திங்களுக்குச் சூடாமணி நிகண்டில் (தேவர் பெயர்த் தொகுதி-58) கூறப் பட்டுள்ளது. - சம்புமாலி என்னும் அரக்கர் படைத்தலைவனுடன் வந்த நால்வகைப் படைகளின் மிகுதியைக் கம்பர் புனைவு செய்திருப்பது சிறப்பாயுள்ளது. தேர்கள் ஐந்தாயிரமும்-- ஐந்தாயிரமும் கொண்ட பத்தாயிரமாம், யானைகள் தேர்களைப் போல் இரு மடங்காம்-இருபதாயிரமாம்; குதிரைகள் யானைகளைப் போல் இருமடங்காம்நாற்பதாயிரமாம்; காலாட் படை குதிரைகளைப் போல் இருமடங்காம்-எண்பதாயிரமாம். இவை சம்புமாலியுடன் சென்றனவாம்: 历一4