பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 பன்னிரண்டு நாள் என்பதற்குப் பன்னிரண்டு பகல் என்று கம்பர் கூறியுள்ளார். "பன்னிரு பகலில் சென்று தென்திசைப் பரவை கண்டார்.' -திருவடி தொழுத படலம்-52. இவ்வாறாக, சிறப்பான சொல்லாட்சிகளையும் தொடர் ஆட்சிகளையும், சி ற ப் பா ன கருத்தாளுகையையும் கையாண்டு கம்பர் காப்பியத்தை தயப்படுத்திக் கற் போர்க்குச் சுவை பயக்கச் செய்துள்ளார். இங்கே மற்று மொரு சிறப்பான கருத்தாட்சியை மறப்பதற்கில்லை அனுமன் இராவணனிடம், இராமன்-சுக்கிரீவன் நட்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்குகின்றான்: சுக்கிரீவன், தன் மனைவி உருமை என்பாளை அண்ணன் வாலி பற்றிக் கொண்டு தன்னையும் துரத்தி விட்டதால் இராமனது நட்பைப் பெற்றுத் தனக்கு உதவி புரியும்படி வேண்டினான். உடனே இராமன் வாலியிடத்தி லிருந்து அரசையும் உருமை என்பாளையும் மீட்கா முன்பே, அரசையும் உருமையையும் சுக்கிரீவனுக்குத் தந்து விட்டதாக உறுதி கூறிப் பின்பு வாலியைக் கொன்றான்: 'ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் உருமை யோடும் கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான்'(பி.ணி வீட்டு படலம்-81) என்பது பாடல் பகுதி. வாலியைக் கொல்லுதற்கு முன்பே சுக்கிரீவனுக்கு ஆட்சியைக் கொடுத்து விட்டதாக இராமன் உறுதி கூறினான்- என்னும் கருத் தாளுமையைக் கம்பர், தமக்கும் முன்னோடிகளான தொல்காப்பியர், கழகப் (சங்கப்) புலவர்கள் முதலியோரி ம் கற்றுக் கொண் டிருப்பார் எனத் தோன்றுகிறது; அவர் கல்வியில் பெரியவ