பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 உலகமும் அழிந்த பின்னும் வாழ்க எனவும் சீதை அனுமனை வாழ்த்துகிறாள் : 'ஊழி ஒர்பகலாய் ஒதும் யாண்டெலம், உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்றென இருத்தி என்றாள்' (72) சடாயு இராவணனோடு பொருது, தன் உயிரை விற்று அத்தொகைக்குப் புகழை விலைக்கு வாங்கி னானாம். 'தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்: (78) பிறர்க்கு உதவி செய்வதால், ஏதேனும் கேடு (இழப்பு) வருமாயின், ஒருவன் தன்னை (தன் உயிரை) விற்றாவது அக்கேட்டைப் பெறுவதே தக்கது-என்னும் கருத்துடைய, "ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து' (220) என்னும் திருக்குதள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. அனுமன் பேருருவம் எடுத்த போது, அவனுடைய இரண்டு காதுகளிலும் இருந்த குண்டலங்கள் (காது அணி கள்) ஞாயிறு, திங்கள் என்னும இரு சுடர்களையும் ஒளி யாலும் தோற்றத்தாலும் மிஞ்சினவாம்: "குண்டலம் இரண்டும் அக்கோளின் மாச்சுடர் மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே" (102) கோளின் மாச்சுடர் மண்டலம்' என்பது, கோள்களுக்குள் மிகுந்த ஒளியுடைய ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. ஞாயிறு போலவும் அதனினும் பெரிதாகவும் விண்வெளியில் பல ஞாயிறுகள் இருப்பதும், திங்களுக்குச் சொந்த ஒளி கிடையாது,- அது ஞாயிற்றின் ஒளியையே எதிரொளிக்கிறது (பிரதி பலிக்கிறது) என்பதும் அந்தக் காலத்தில் கம்பருக்கோ வேறு வம்பருக்கோ தெரியாது. சு-5