பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 படித்துப் பொருள் புரிந்து கொள்ளும்படி சொற்களைப் பிரித்து அமைத்துப் பதிப்பித்திருத்தலேயாகும். மற்றும், இம்மலிவுப் பதிப்பே பலராலும் வாங்கப்பட்டிருக்கும்; என் நூலோடு ஒத்திட்டுப் பார்க்க உதவும். 'மலரை இதழ் இதழாகப் பிய்த்தும் கசக்கியும் நுகர்வது பொருந்தாது என்பது'அடியேனுக்கும் தெரிந்த செய்தி தான். இருப்பினும், எல்லோரும் படித்து இன்புறும்படி இப்படியொரு பதிப்பும் இருக்கலாமே! யாப்பிலக்கண வல்லுநர்கள் சுவைக்கும்படியாக வேறு சில பதிப்புகள் உள்ளனவே! அவர்கட்கு அவை சாலும்! 1 . . . . - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் குறிப்புரை யுடன் வெளியிட்டுள்ள பதிப்பில், முதலில் பாடல்களைச் சொல் பிரிக்காத வடிவத்தில் தந்து, பின் அதன் பக்கத் திலேயே, சொல் பிரித்த வடிவத்தையும் தந்துள்ளனர். இதன் நோக்கம் என்ன்? எல்லாரும் படித்து எளிதில பொருள் உணர்ந்து சுவைக்க வேண்டும் என்பது தானே! இடையிடையே யான் தந்துள்ள பாடல் எண்கள் 'மர்ரே பதிப்பில் உள்ளவாறாகும். படல அமைப்பும் அன்னதே. எனது இந்த நூல் கம்ப ராமாயண முழுநூலையும் பற்றியதில்லையாதலின், கம்பர் வரலாறு பற்றியோ-காலம் பற்றியோ யான் ஒன்றும் கூறவில்லை. என்னைத் தூண்டி இப்படியொரு நூலை எழுதச் செய்த நண்பர் உயர்திரு அருணகிரி அவர்கட்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன். இதைக் கம்பன் கழ்க அனுமதி புடன் வெளியிட்ட வானதி பதிப்பகத்தாருக்கு என் நன்றியும் வாழ்த்தும் உரியன. வணக்கம். சுந்தர சண்முகன்