பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கடலை நீந்திக் கொண்டிருப்பதாகும். ஆனால், இராமனை அடையாவிடின், நீந்திக்கொண்டேதான் இருக்க வேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது. அங்ங்னம் நீந்திக் கொண்டேயிருப்பது நேராதவாறு உ ன் ைன இராமனிடம் சேர்க்கிறேன் என்று அனுமன் அறிவிக்கிறான். இல்லையேல் சீதை நீந்தாள். இது போலவே, 'இறைவனடி சேரா தார் பிறவிட் டெ ருங்கடல் நீந்துவர்” என்றால் நீந்திக் கொண்டேயிருப்பார்கள்; ஆனால், நீந்தார் = நீந்திக்கரை யேறமாட்டார்கள் என்று பொருள் கொள்ளின், இல்லாத சொல்லை வருவிக்கவேண்டிய இரங்கத் தக்க நிலை ஏற்படாது. அறிஞர்கள் ஆய்க. அனுமன் மேலும் சீதைக்குச் சொல்லுகிறான்: நான் போர்புரி யின், பேயும் பறவைக்கூட்டமும் அரக்கரின் புண்களிலிருந்து வரும் குருதி நீராகிய கடலில் முதலில் குளித்து, பின்பு, அரக்கியரின் கண்ணிராகிய ஆற்றில் குளிப்பதைக் காணலாம். "விண்ணின் நீளிய நெடுங் கழுதும் வெஞ்சிறை எண்ணின் நீவிய பெரும் பறவை ஈட்டமும் புண் ணின் நீர்ப் புணரியில் படிந்து, பூவையர் கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால்' (56). உலகில், நல்ல நாட்களில்-விழா நாட்களில் முதலில் கடலில் குளித்த மக்கள், பின்னர் உப்புக் கசிவைப் போக்கிக் கொள்வதற்காக நல்ல ஆற்று நீரில் குளிப்பது வழக்கம். அருகில் ஆறு இல்லா விடின, வாய்க்கால் நீரிலோ, அல்லது கிணற்று நீரை மொண்டோ குளிப்பர். காவிரிப்பூம் பட்டினத்தில் முதலில் கடலில் குளித்தவர்கள் பின்னர்க் காவிரி நீரில் குளிப்பர் எனப் பட்டினப் பாலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது: 'தீது நீங்கக் கடல் ஆடியும் மாசு போகப் புனல் படிந்தும்'- (99,100).