பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 (பொழில் இறுத்த படலம்) அனுமன் அசோகவனத்தை அழித்த காலையில், தெய்வ மரங்களில் இருந்த பறவைகள் தம் கூண்டுகளோடு துறக்கம் (சொர்க்கம்) அடைந்தனவாம். அனுமன் சீறிச் சினந்ததற்கே சொர்க்கம் கிடைத்ததெனில், அனுமன் அருள் (கருணை) புரிந்திருந்தால் இன்னும் பெரும் பயன் கிடைத்திருக்கலாமோ! "தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும் தொடுத்தபுள் தம் கூட்டொடும் துறக்கம் புக்க; குன்றெனக் குவவுத் திண்தோள் சேட்டகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல் தன்னால்; மீட்டவன் கருணை செய்தால் பெரும்பதம் விளம்பலாமோ! (43) கம்பர் கருத்து வெளியிட்டிருக்கும் இந்த முறையும் ஒரு வகை நயம் பயக்கிறது. மற்றும், கூட்டொடும் துறக்கம் புக்க என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. உலகியலில் "கூண்டோடு கைலாசம் போகிறார் என்று கூறும் வழக் காற்றை இத் தொடர் நினைவு செய்கிறது. உடம்பினின்றும் உயிர் பிரிந்த பின், உயிர் துறக்கம் புகுவது ஒரு வகை. உடம்புடனேயே துறக்கம் புகுவது மற்றொரு வகை சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் முதலி யோர் உடம்புடனேயே கயிலை புக்கனர் என்பது பெரிய புராண வரலாறு. ஒளவையாரும் இவ்வாறு சென்றாராம். இதனை, ஒரு சார் மெய்யுணர்வு (தத்துவ) நூலோர், 'சீவன் முத்தி என்று குறிப்பிடுவர். கம்பர் இதனை உள்ளத்தில் கொண்டு, கூட்டொடும் துறக்கம் புக்க’ என்று கூறி யிருப்பது சிறப்புடைத்து. தேவர்கள் இலங்கையில் காவல் காக்கின்றனராம். அசோகவனத்திலும் நேரத்துக்கு நேரம் முறை மாற்றிக்,