பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா கீாண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்-என ஆறு பிரிவுகள் 'உள்ளன. இந்தக் காண்டப் பெயர்கள் வால்மீகி திம் இராமாயண நூலில் வைத்த பெயர்கள். இந்த ஆறனுள் இங்கே எடுத்துக் கொண்டது சுந்தர காண்டம் மட்டு மாகும். - - பால காண்டம், பருவத்தால் பெற்ற பெயர்; அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் என்பன செயல் நிகழ்ந்த இட்த்தால் பெற்ற பெயர்களாகும். யுத்த காண்டம், செயலால்-வினைய்ால் பெற்ற பெயராகும். சுந்தர காண்டம் எதனால் பெற்ற பெயராகும்? பெயர்க் காரணம் : - சுந்தரம் என்பதற்கு அழகு, இனிமை, நன்மை என் றெல்லாம் பொருள் உண்டு. எனவே, அழகிய காண்டம் என்னும் பொருளில் இப்பெயர் வந்ததாகப் பெரும்பாலார் பெயர்க்காரணம் கூறுகின்றனர். யாருடைய அழகைப் பற்றியத் இக்கர்ண்டம்: பால காண்டத்தில்,