பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கொடி அங்கும் இங்கும் அசைந்து ஒரு பக்கம் வருவதும் இன்னொரு பக்கம் போவதுமாக இருக்கும். ஆற்றின் வெண்மையான அலையும் முன்னும் பின்னும் போவதும் வருவதுமாக இருக்கும். அரக்கர்களின் புகழும் அவர்களின் போர்த்திறமையால் வருவதும் அவர்கள் இறந்த பின்பு போவதுமாக உள்ளது. இவ்வாறு ஒப்புமைக் குப் போவதும் வருவதுமான பொதுமை காண வேண்டும். அரக்கர்கள் அனுமன் மேல் சில படைக்கலங்களை எறிந்தும் அம்புகளை எய்தும் பொருதனர். அப்படைக் கலங்கள், விறைத்துக் கொண்டிருக்கும் அனுமனின் மயிர் களின் மேல் பட்டு வீழ்ந்தன. அவை மயிர்ப்புறம் படுவது அனுமனுக்குத் தினவு தீரச் சொறிந்து விட்டது போல் இருந்ததாம். தினவுக்குச் சொறிந்ததால் அனுமன் ஒரு வகை ஆறுதல் பெற்றவன் போல் காணப்பட்டானாம்: "எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன பொறிந்தெழு படைக்கலம் அரக்கர் போக்கினார்; செறிந்தன மயிர்ப்புறம்; தினவு தீர்வுறச் சொறிந்தனர் என இருந்து அனுமன் தூங்கினான்?? (30) இங்கே உலகியல் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவன் தன் எதிரியால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்னும் பொருளில், அவனால் என் கடைமயிரையும் அசைக்க முடியாது’ என்றும், அவன் என்ன- என் மயிரைப் பிடுங்கிவிடுவானா என்றும் கூறுவது உலகியல், அவ்வாறே, அரக்கர்களின் படை அனுமனின் மயிரையும் ஒன்றும் செய்ய முடியாமல் சொறிந்து கொடுத்தது போல் இருந்ததாம்-என்பதாகப் பாடியுள்ள கம்பரின் கவி நயம் சுவைக்கத்தக்கது. (அக்ககுமாரன் வதைப் படலம்) ஆயிரக் கணக்கான-கோடிக் கணக்கான அரக்கர்கள், காட்டுத்தீயில் காய்ந்த புல்காடு அழிவது போல், "ஏ" சு-6