பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ராம்; சிலர் அரக்கராகிய தம் செம்பட்டை மயிரைக் கருமை யாக்கிக் கொண்டு மனிதர்கள் போல் நடித்தனராம்: 'மீனாய் வேலையை உற்றார் சிலர்; சிலர் பசுவாய் வழிதொறும் மேய்வுற்றார்; ஊனார் பறவையின் வடிவானார் சிலர்; சிலர் நான்மறையவர் உருவானார்; மானார் கண்ணிள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் ஆனார் சிலர்; சிலர் ஐயா நின்சரண் என்றார்; நின்றவர் அரி என்றார்." (40), 'தம்தாரமும் உறுகிளையும் தமையெதிர் தழுவுந்தொறும், நும தமர் அல்லேம்வந்தேம் வானவர் என்றேகினர் சிலர்; சிலர் மானுயர் என வாய்விட்டார்; மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள் ஆனார் சிலர்; சிலர் மருள் கொண்டார்; இந்தார் எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல் குஞ்சியை இருள் வித்தார்’ (41), பசு வடிவமும் பார்ப்பனர் வடிவமும் பெண் வடிவமும் சிலர் கொண்டதாகக் கம்பர் கூறியுள்ளதன் உட்பொருள் என்ன? அறப்போர் புரியும் அரசர்கள், மாற்றார் நாட்டில் போர் தொடங்குமுன், பசுக்களும் பசுப் போன்ற பார்ப்பன மாக்களும் பெண்களும் பிள்ளை பெறாதவர் களும் அகன்று விடவேண்டும்; யாம் அம்பு எய்து போர் புரியப் போகிறோம் என்று முன் கூட்டி அறிவித்து அப் புறப்படுத்தச் செய்வார்களாம்-இதனை, நெட்டிமையார் என்னும் புலவர் பாடியுள்ள,