பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

வியந்து பாராட்டினார்" என்பது. பின்னர், அமிர்தலிங்கனார், சு. ச. விற்கே பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து மடல் எழுதினார்.


1968-சென்னை இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு - பலர்முன் டாக்டர் மொ. அ. துரை அரங்கசாமி கூறியது: "சுந்தர சண்முகனார் எங்கோ ஒரு மூலையில் (புதுச்சேரியில்) இருக்குமிடம் தெரியாமல் இருந்து கொண்டு பெரிய தமிழ்ப் பணி செய்து கொண்டுள்ளார்.


1971- காரைக்குடி கம்பன் விழாவின்போது அறிஞர் சா. கணேசன் கூறியது: சுந்தர சண்முகனார் தான் புதுச்சேரியில் இருந்துகொண்டு சரியான தமிழ்ப் பணி செய்கிறார்.


1973- பிப்ரவரி - சென்னை மாநிலக் கல்லூரியில் 'மொழி ஒப்பியல்' (Comparative Philology) என்னும் தலைப்பில் திடீரென இரண்டு மணி நேரம் சு. ச. (சுந்தர சண்முகம்) பேசியதும், முடிவுரையில், டாக்டர் மெ. சுந்தரம் கூறியது: வர இருக்கும் புதுவைப் (அரவிந்தர்) பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் யார் என்பதை இப்போதே தெரிந்து கொண்டோம்.


1973-திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற ஞானியாரடிகளாரின் நூற்றாண்டுச் சொற்பொழிவினிடையே டாக்டர் வ. சுப. மாணிக்கம் மொழிந்தது: புதுச்சேரி என்றதும் எங்களுக்கெல்லாம் சுந்தர சண்முகனாரின் நினைவுதான் முதலில் வரும்.


1982-தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - துணை வேந்தர் டாக்டர் வி. ஐ. சு. அவர்கள் சு. ச. விடம் சு. ச. வைப்பற்றி நேரில் சொன்னது: புதுச்சேரி புதுச்சேரி - நல்ல Brain - நல்ல Brain. ஆனால் பணிவு குறைவு.