பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் துயரமே! அறிவோடு நடந்து கொள். அமைதியாக இரு இரவின் கொடுமைக் கஞ்சி நீ கதறுகிறாய்; இரவு விழுந்து விட்டது இதோ, விடியல் தலை தூக்குகிறது. -என்று ஞானி போல் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார். என்றாலும் அவர் வாழ்வில் மிஞ்சியது ஏமாற்றமே. அவர் எழுதியுள்ள உரைப்பாடல்களில், வாழ்வின் இறுதியில் அவர் கொண்ட சலிப்பும், ஏமாற்றமும் உருக்கமாகப் பேசப்படுகின்றன. சில சமயங்களில் என்னை ஒரு ஞானியென்று நான் முட்டாள் தனமாக நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு மருத்துவனுக்கு இருப்பது போல், அருளுள்ளம் என்னிடத்தில் அமைய வேண்டும் என்று நான் அவாவுவதுண்டு; அப்பேறு எனக்குக் கிடைக்கப் போவதில்லை. இவ்வஞ்சக உலகில் என்னை நானே தொலைத்து விட்டு, மக்கட் கூட்டத்தின் புறங்கையால் இடித்துத் தள்ளப்பட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். என் கடந்த கால நினைவுகளின் ஆழத்தை அடிக்கடி எட்டிப் பார்த்து, நான் மிகவும் களைத்துப் போய் விட்டேன். ஏமாற்றமும், கசப்புணர்ச்சியும், துன்பமா-மீட்சியா என்று உணரமுடியாத குழப்பமும்ே, எனக்கு மிஞ்சியவை என்று புலம்புகிறார் போதலேர். மேகத்தின் உச்சியில் பறப்பதற்கு உதவிய பெரிய சிறகுகளின் சுமை, பூமியில் கடற்பறவையைச் செயலற்றதாக்குவது போல், கற்பனைச் சொர்க்கத்தில் பறப்பதற்கு உதவியாக இருந்த இவரது சிறகுகளே (கஞ்சா, அளவற்ற மதுப்பழக்கம்) கடைசி நாட்களில் இவரை முடக்கிப் போட்டு விட்டன. பக்கவாதம், இவரை முடக்கிப் போட்டுவிட்டன. பக்கவாதம், இவ்ரைப் படுக்கையில் தள்ளி விட்டது. சிபிலிஸ் இவரைச் சிதைத்துவிட்டது. நீண்ட நாள் கஞ்சாப் பழக்கத்தின் கடைசி மைல்கள், தலைசுற்றலும் (vertigo) பைத்தியமும்தான். தன்கடைசி நிலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'இன்பமும் அதிர்ச்சியும் கொண்ட இழுப்பு நோய் (Hysteria) எனக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. தொடர்ந்த தலை சுற்றலால் நான் அவதிப்பட்டுக் 103