பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவன் சேதுபதி காளையார் கோயில் வந்து சேர்ந்தார். ஆனால் செவந்தெழுந்த பல்லவராயரோ இன்னும் வந்தபடில்லை. அவர் வரும் வழியில் கண்டதேவி என்னும் ஊரில் தங்கி ஆலய வழிபாடு செய்ததனால் வரச் சுணங்கி விட்டார். பொறுமையிழந்த சேதுபதி சினந்தெழுந்து 'செவந்தெழுந்தானைக் கட்டிவா என்று தன் மகனுக்கு ஆணை பிறப்பித்தார். சேதுபதி மைந்தனால் இழுத்து வரப்பட்ட செவந்தெழுந்த பல்லவராயரின் அரசு பறிக்கப்பட்டது. அப்பகுதி கிழவன் சேதுபதியால் இரகுநாதராயத் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது. செவந்தெழுந்தார் சில நாட்களில் உயிர்துறந்தார். ஆக திருமெய்யம் உள்பட புதுக்கோட்டைப் பகுதி முழுமையும் இரகுநாத ராயத் தொண்டைமான் வசமாயிற்று. அவர் முதல் தொடங்கி பத்து தொண்டமான்கள் பிரிட்டீசு அரசில் தனியரசு ஆட்சி செலுத்தியுள்ளனர். ஆட்சி உரிமை இழந்த பல்லவராயரின் வழி வந்தோர் சிலர் ராயத் தொண்டமான்களிடம் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக வாட்போர்ப்படைப் பிரிவுக்குத் தளபதியாக பெரும் பல்லவராயர் என்பவர் இருந்திருக்கிறார். தொண்டமான்படையில் ஒரு படைப்பிரிவின் தலைவராகப் பணி புரிந்த நம் வெங்கண்ண்ன் சேர்வைக்காரரையும், (பல்லவராயரின் முன்னோர் ஒரு சேர்வை என்பதால்) பல்லவராயர் வழி வந்தவர் என்று கருத இடமுள்ளது. புதுக்கோட்டைத் தொண்டமான் அரசின் படை அமைப்பில் படைத் தளபதியை பவுஜ்தார் (Fauzda) எனவும், படைப் பிரிவுத் தலைவரை சர்தார் (Sardat) அல்லது சேர்வைகாரர் (Servakar) எனவும் படைவீரர்களை அமரக்காரர் (Amarakkar) ersarayib lopp ஊழியர்களை ஊழியக்காரர் (Ullyaka) எனவும் பெயரிட்டிருந்தனர். வெங்கண்ணன் சேர்வைக்காரர் ஆரம்பத்தில் ஒரு சாதாரண ஊழியக்காரர்தான். நாளடைவில் அவரது வீரப் பேராற்றலினால் ஒரு சேர்வைகாரர் அளவுக்குப் பதவி உயர்வு பெற்றார். ராயத்தொண்டமான் வரிசையில் ஆறாமவரான ரகுநாதத் - தொண்டமான் (1825-39) ஆட்சியில் நிலவரி ஒழிக்கப்பட்டது. அவர் 1839-ல் காலமான போது அவரது மைந்தர் இராமச்சந்திரத் தொண்ட மானுக்கு வயது ஒன்பது. அப்போதே அரசுப்பட்டங்கட்டப்பட்டு விட்டபோதிலும் நேரடியாக ஆட்சிப் பொறுப்பேற்றது, 1844-ல் II6