பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். ஏற்கெனவே நிலவரி எடுக்கப்பட்டதாலோ வேறு நிர்வாகக் குறைபாடுகளினாலோ நாட்டுப் பொருளாதார நிலை சீர் கேடடைந்து 1853 அளவில் பயங்கரமான நிலை தலை தூக்கிற்று. நாட்டுமக்கள் மிகுதியும் அதிருப்தியுற்றிருந்தனர். அவர்களுக்கு எதிராக அரசு தன் படைபலத்தை ஏவ முற்பட்டிருந்தது. அப்போது தங்களை வழி நடத்த யாராவது வரமாட்டார்களா என்றிருந்த மக்களுக்கு வெங்கண்ணன் சேர்வைகாரர் ஒரு விடிவெள்ளியாகத் தென்பட்டார். - மக்களின் துயரைப் துடைப்பதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குவதற்கே அரசு படையைப் பயன்படுத்த முற்பட்டது. வெங்கண்ணன் சேர்வைகாரர் படைப்பிரிவில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி படையினரில் ஒரு பகுதியை, அதிருப்தி யுற்று கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு, ஆதரவாகத் திருப்பினார். அமரக்காரர்களை படைப்பணிக்குச் செல்லாதபடி தூண்டினார். அவர்களை அரசு ஆணைக்குக் கட்டுப்படாதபடி செய்யுமளவு அவர்களைத் திருப்பினார். 'விவசாயிகளே, அரசுக்கு வரி கொடாதீர் நிலம் என்னவோ அரசுக்குரியதுதான். விளைவிப்பது நீங்களல்லவோ நீங்கள் விளைவிக்கிற நெல்லை நீங்களே எடுத்துச் செல்ல இவர்களென்ன தடை சொல்வது?’ என்று விழிப்பூட்டினார். கிளர்ச்சிக்காரர்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்தது. தொண்ட மான் தன் படையினால் இவர்களை அடக்க முடியாது என்று கண்டு கொண்டார். நவீன ஆயுதங்களும் பெரும் படையும் கொண்ட பிரிட்டீசு அரசிற்கு அவசரக் கடிதம் அனுப்பினார். 1854 மத்தியில் பிரிட்டீசு இராணுவம் புதுக்கோட்டையில் வந்து இறங்கிற்று. வெள்ளையர் படைவருகிறது என்றுவெங்கண்ணர் அஞ்சவில்லை. இறுதிவரை போராடினார். கடைசியில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. எழுச்சி அப்போதைக்கு ஒய்ந்தது. வெங்கண்ணரை அடக்க அந்நியரான வெள்ளையர் படையை புதுக்கோட்டை அரசு அழைத்தது. விளைவு? ஆங்கிலேய இராணுவத்தினர் புதுக்கோட்டையில் தொண்டமான் செலவில் நிரந்தர விருந்தினராக நிறுத்தி வைக்கப்பட்டனர். அது it?